ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த ஆஸி. நீச்சல் வீராங்கனை எம்மா மெகான்: 4 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் வென்று அசத்தல்

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் | படம் உதவிட்விட்டர்
ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் | படம் உதவிட்விட்டர்
Updated on
1 min read


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நீச்சப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெகான் 4 தங்கம் உள்ளி்ட்ட 7 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

நீச்சல் பிரிவில் ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையையும், சாதனையையும் எம்மா மெகான்படைத்துள்ளார்.

டோக்கியோ அக்வாடிக் மையத்தில் இன்று நடந்த 400 மீட்டர் ரிலே நீச்சல் பிரிவில் 2 முறை நடப்பு சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

400 மீட்டர் நீச்சல் ரிலே போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கெய்லே மெக்வோன், செல்ஸி ஹாட்ஜஸ், எம்மா மெகான், கேட் கேம்பெல் 3:51:60 மைக்ரோ வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து தங்கம் வென்றனர்.

அமெரிக்காவின் வீராங்கனைகள் கொண்ட அணி 3:51:73 மைக்ரோ வினாடிகளில் கடந்த வெள்ளியையும், கனடா அணியினர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

எம்மா மெகான் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெறும் 7-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன், 100மீ ப்ரீ ஸ்டைல், 400மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே,400மீ மெட்லே ரிலே நீச்சல், 50மீ ப்ரீஸ்டைல் ஆகியவற்றில் மெகான் தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் 400மீமெட்லே ரிலே, 100மீ ஃபட்டர்ப்ளை, 800மீ ப்ரீஸ்டைல் ஆகியவற்றில் வெண்கலப்பதக்கத்தையும் மெகான் கைப்பற்றினார்.

இதற்கு முன் கடந்த 1952ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோ 6 பதக்கங்களையும், 2008ல் அமெரிக்க வீராங்கனை நடாலி காப்லின் ஆகியோர் மட்டுமே ஒரே ஒலிம்பிக்கில் 6பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தனர். ஆனால் ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இவர்களின் சாதனையை எம்மா மெகான் முறியடித்துள்ளார்.

முன்னதாக அமெரி்க்க நீச்சல் வீராங்கனை கேட்டி லெடக்கி 6-வது தங்கப்பதக்கத்தையும் 800மீ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வென்றார். இது அவருக்கு ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் வெல்லும் 10-வது பதக்கமாகும். 800மீ ப்ரீஸ்டைல் பிரிவில் கேட்டி லெடக்கி இதுவரை யாராலும் தோற்கடிக்க முடியாத வீராங்கனையாக 11 ஆண்டுகளாக வலம் வருகிறார். 800 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் இந்த முறை 8:12:57 மைக்ரோ வினாடிகளில் தொலைவைஎட்டி கேட்டி லெடக்கி தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் அரியார்னி டிட்மஸ் வெள்ளியையும், சிமோனா குவடேர்லா வெண்கலத்தையும் வென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in