Published : 18 Feb 2016 11:44 AM
Last Updated : 18 Feb 2016 11:44 AM

இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. முதலி பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கவுசல்யா 43 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார். எளிதான இலக்குடன் விளையாடிய இந்திய அணி 43.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மிதாலி ராஜ் 53, மந்தனா 46, வேதா கிருஷ்ணமூர்த்தி 41 ரன் எடுத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் 19ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x