Published : 04 Feb 2016 07:40 PM
Last Updated : 04 Feb 2016 07:40 PM

அதிரடி ஆட்டம் பற்றி சேவாகிடம் கற்றுக் கொண்டேன்: புஜாரா

ஒருநாள், டி20 போட்டிகளிலும் தனது தடத்தைப் பதிக்கக் காத்திருப்பதாக கூறும் செடேஷ்வர் புஜாரா, ஆக்ரோஷமான ஆட்டத்தைப் பற்றி சேவாகிடம் தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் சேவாகுடன் ஆடினார் புஜாரா. அந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது,

“அவர் (சேவாக்) என்னிடம் கூறினார், ‘உன்னிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன, அதனால் களத்தில் அச்சமற்ற முறையில் ஆடி உன்னை நீ வெளிப்படுத்திக் கொள்வதைத்தான் செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும் அதிரடி ஆட்டத்துக்கான சில யுக்தி நுணுக்கங்களையும் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அதைத்தான் நான் இப்போது உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட், டி20 ஆட்டங்களில் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

அதே போல் ராகுல், சச்சின் ஆகியோரிடம் பேசினேன், அவர்களும் எனது பேட்டிங் யுக்திகளில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றனர். அவர்களும் நான் மற்ற வடிவங்களிலும் கால்பதிக்கலாம் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஆகவே இவர்களது ஆலோசனைகளின் படி சில புதிய ஷாட்களை பரிசோதித்து வருகிறேன், இது ஏற்கெனவே எனக்கு உள்நாட்டு டி20 போட்டிகளில் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. எனவே அதிக ஷாட்களை கைவசம் வைத்திருப்பது எந்த கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் பலன் அளிக்கக் கூடியதுதான்”

என்றார் புஜாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x