Published : 30 Jul 2021 12:50 PM
Last Updated : 30 Jul 2021 12:50 PM

தோல்வியடைந்ததை நம்ப முடியவில்லை; ஆடையை மாற்றச் சொன்னது ஏன்?- மேரி கோம் கேள்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேரி கோம் கூறும்போது, “நான் குத்துச்சண்டை வளையத்துக்குள் இருக்கும்போது மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனென்றால் என்னளவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நான் நினைத்தேன். என்னை அவர்கள் ஊக்க மருந்து பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது கூட நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

சமூக வலைதளங்கள் மற்றும் எனது பயிற்சியாளர் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறியபோதுதான் நான் தோல்வியுற்றது தெரிந்தது. இன்கிரிட் வெலன்சியாவை நான் கடந்த காலங்களில் இரண்டு முறை வென்றிருக்கிறேன். நடுவர் அவரை இந்தப் போட்டியில் வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''காலிறுதியின் முந்தைய போட்டியில் நுழைவதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ஆடைக்கு பதிலாக வேறு ஆடையை மாற்றுமாறு தெரிவித்தார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பது குறித்து விளக்கம் வேண்டும்” என்றும் மோரி கோம் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x