

வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் டெஸ்டில் வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதீ தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சந்தர்பால் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சவுதீ 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் 3 இடங்கள் முன்னேறி முதன் முறையாக 5வது இடம் பிடித்துள்ளார்.
பந்து வீச்சுத் தரவரிசையில், டேல் ஸ்டெய்ன், ரியான் ஹேரிஸ், வெர்னன் பிலாண்டர், மிட்செல் ஜான்சன், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார் சவுதீ.
பந்து வீச்சில் முதல் 5 இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களே இடம்பெற்றுள்ளனர். அடுத்த இடங்களில் அஜ்மல், ஹெராத், அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
பேட்டிங்கில் சந்தர்பால் சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டிவிலியர்ஸ் முதலிடம் வகிக்கிறார். இவருக்கும் சந்தர்பாலுக்கும் இடையே 41 தரவரிசைப் புள்ளிகளே இடைவெளி உள்ளது.