செய்தித்துளிகள்

செய்தித்துளிகள்
Updated on
1 min read

$ ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இஸ்பான் யால் அணியை வீழ்த்தியது. இதில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.

-----------------------------------------

$ ஐபிஎல் டி 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

-----------------------------------------

$ அமெரிக்காவின் ஒகியோ நகரில் நடைபெற்று வரும் கிளீவ்லன்ட் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர்.

-----------------------------------------

$ இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை ஆஸி. அணி இழந்த நிலையில் டி 20 உலககோப்பை தொடர் நடத்தப்படுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என ஆஸி. முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------

$ துபை விமான நிலையத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் பாஸ் போர்ட்டை படம் பிடித்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட போஸீஸ் காரருக்கு ஒரு மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் வெளியிடப்படாத நிலையில் இன்ஸியல் மட்டும் ஜே.ஜே. என தெரிவிக்கப் பட்டுள்ளது.

-----------------------------------------

$ ஐசிசியின் டி 20 பேட்ஸ் மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸி. வீரர் ஆரோன் பிஞ்சை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

-----------------------------------------

$ டி 20 உலககோப்பைக்கான நியூஸி., அணியில் நாதன் மெக்கலம், மிட்செல் ஷான்டர், இஷ் சோதி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in