ஜெயவர்தனே மீது இலங்கை வாரியம் அதிருப்தி

ஜெயவர்தனே மீது இலங்கை வாரியம் அதிருப்தி
Updated on
1 min read

இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக ஜெயர்வதனே செயல்பட்டார்.

இந்நிலையில் டி 20 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக ஜெயவர்தனே செயல்பட உள்ளார். இந்த விவகாரத்தால் இலங்கை வாரியம் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளது.

இதுதொடர்பாக வாரிய தலைவர் திலங்கா சுமதி பாலா கூறும்போது, "கிரிக்கெட் வீரராக ஒருவர் ஓய்வு பெற்ற உடனேயே அடுத்த அணியில் சேர்வது நல்ல விஷயம் அல்ல. என்னை பொறுத்தவரையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வீரரை, அடுத்த அணியின் நிபுணராக பணிபுரிய இரண்டு ஆண்டுகளுக்கு அனுமதிக்கக் கூடாது.

ஏனேனில் அந்த வீரர் தான் விளையாடிய அணியின் உள்ளே நடைபெறும் விஷயங்கள் மற்றும் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருப்பார். இது விளையாட்டின் நெறிமுறையை கேள்விக்குரியதாக்கிவிடும். தனிப்பட்ட முறையில் ஜெயவர்தனேவுடன் எனக்கு எந்த விரோதமும் இல்லை. விளையாட்டில் அவரது பரந்த அறிவை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

டி 20 உலகக்கோப்பையில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in