ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்
Updated on
1 min read

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா நேற்று சிங்கப்பூரை சந்தித்தது. ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியா வின் காந்த் 21-16, 12-21, 21-13 என்ற செட்டில் லியாங் டெரிக் வோங்கை வீழ்த்தினார். இரண்டாவது ஆட்டத்தில் அஜய் ராம் 21-11, 21-18 என்ற நேர் செட்டில் கீன் யூ லோவை தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியா வின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-15, 21-14 என்ற கணக்கில் யோங் காய் டெர்ரி ஹீ, கீன் லோ ஜோடியை வென்றது. மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, அக்ஸய் திவால்கர் ஜோடி 21-14, 21-13 என்ற கணக்கில் டேனி பாவா கிறிஸ்னான்டா, ஹென்ட்ரா விஜெயா ஜோடியை வீழ்த்தியது.

கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் பிரணோய் 21-10, 21-12 என்ற நேர் செட்டில் ஷீன் ரெய் ரேயானை தோற்கடித்தார்.

வெற்றி தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் கூறும்போது, "இது சிறந்த வெற்றி. 5-0 என வெற்றி பெற்றது அற்புதமான விஷயம். அடுத்த சுற்றிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in