Last Updated : 19 Jul, 2021 08:34 AM

 

Published : 19 Jul 2021 08:34 AM
Last Updated : 19 Jul 2021 08:34 AM

10-வது பேட்ஸ்மேன் ஷிகர் தவண்: 2-வது பேட்ஸ்மேன் இஷன் கிஷன்: புதிய மைல்கல்

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தவண் பந்தை பவுண்டரிக்கு விளாசிய காட்சி | படம் உதவி ட்விட்டர்

கொழும்பு

இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஷிகர் தவணும், இளம் வீரர் இஷான் கிஷனும் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் ஆட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. 263 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து263 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் ஷிகர் தவண் தனது ஒருநாள் போட்டிகளில் 6ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிராக 1,000 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையையும் தவண் முறியடித்துள்ளார்.

கங்குலி 146 இன்னிங்ஸில்தான் ஒருநாள்போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார், ஆனால், தவண் 140 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய 10-வது இந்திய வீரர் எனும் பெருமையை தவண் பெற்றார். அதுமட்டுமல்லாமல் வேகமாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வீரர் எனும் சிறப்பையும் தவண் பெற்றுள்ளார். முதலில் ஹசிம்அம்லா, 2-வது விராட் கோலி, 3-வது கேன் வில்லியம்ஸன் 4-வதாக தவண் உள்ளார்.

இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கல்(18,426ரன்கள்), விராட் கோலி(12,169), சவுரவ் கங்குலி(11,221), ராகுல் திராவிட்(10,768), தோனி(10,599), அசாருதீன்(9,378), ரோஹித் சர்மா(9,205), யுவராஜ் சிங்(8,609),ேசவாக்(7,995) ஆகியோர் 6 ஆயிரன்களைக் கடந்துள்ளனர்.

இளம் வீரர் இஷான் கிஷன் தனது அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அசத்தினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த இஷன் கிஷன் அதிகவேகமாக அரைசதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன் அறிமுகப் போட்டியில் குர்னல் பாண்டியா கடந்த மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 26 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தார்போல், தற்போது இஷான் கிஷன் 33 பந்துகளில்அரைசதம் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x