

6வது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நஷீர் ஹோஸைன், முகமது மிதுன் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டில் ஜிம்பாப்வே தொடரில் விளையாடியிருந்தனர்.
உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி குருப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அணிகளும் உள்ளன. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 9ம் தேதி நெதர்லாந்தை சந்திக்கிறது.
அணி விவரம்:
மோர்டஸா(கேப்டன்), ஷாகிப் அல்-ஹசன், தமிம் இக்பால், முகமது மிதுன், மஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஷபீர் ரகுமான், நஷீர் ஹோசைன், முஸ்டாபிஜூர் ரகுமான், அல்-அமீன் ஹொசைன், தஸ்கின் அகமது, அரபாத் ஷன்னி, அபு ஹைதர், நுருல் ஹசன்.