

உருகுவே வீரர் சுவாரேஸ் அன்று இத்தாலி வீரர் சியெலினியின் தோள் பட்டையைக் கடித்துக் குதறியதை அடுத்து பிரேசில் வீரர்களான நெய்மார் மற்றும் ஃபிரெட் விளையாட்டாக கடி-யில் இறங்கினர்.
பயிற்சியின் போது இருவரும் சக வீரர்களான மார்செலோ மற்றும் டேனி அல்வேஸை விளையாட்டாகக் கடிப்பது போல் பாவனை செய்து பொழுதுபோக்கினர்.
விளையாட்டாக இருந்தாலும் சிலி அணியை எதிர்கொள்வதன் ஆபத்தை உணராமல் இல்லை பிரேசில் வீரர்கள்.
அந்த அணியின் மிட்ஃபீல்டர் வில்லியன் கூறுகையில், “சுவாரேஸ் சம்பவத்தைப் பார்த்தோம், அனைவரும் பார்த்தனர், ஆனால் இது குறித்து நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை. எங்களுக்கு சிலி போட்டி மிக முக்கியம், ஆகவே இது போன்ற மேம்போக்கான விவகாரங்களில் கவனத்தைச் சிதறவிடப்போவதில்லை” என்றார்.