

இலங்கை அணியில் மூத்த வீரர்களான குஷால் பெரேரா, சமீரா, தனஞ்சயா ஆகியோர் அடங்கிய முதல் அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, நாளை பயோ-பபுள் சூழலுக்குள் செல்கின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியபின் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கை வீரர்கள் இருந்தனர். அவர்களுக்கு கரோனா நெகட்டிவ் வந்ததையடுத்து, நாளை பயோ-பபுள் சூழலுக்குள் சென்று பயிற்சியைத் தொடங்குகின்றனர்.
இங்கிலாந்து பயணத்தை முடித்துவிட்டு இலங்கை அணி தாயகம்திரும்பியது. இங்கிலாந்து வீரர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்தையடுத்து, இலங்கை வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.
இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனாலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் வீரர் வீரக்கொடியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை அணிக்குள் கரோனா தொற்று புகுந்ததையடுத்து, இந்தியாவுடனான ஒருநாள் தொடர் தொடங்கும் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. 13-ம் தேதி தொடங்கும் போட்டி 5 நாட்கள் தாமதமாக 18-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் முடிந்தபின் டி20 தொடர் நடக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களின் தனிமைக்காலம் நேற்று முடிந்ததையடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்தது. இதையடுத்து, நாளை அனைவரும் பயோபபுள் சூழலுக்குள் செல்கின்றனர்.
இலங்கை வாரிய வட்டாரங்கள் கூறுகையில், “ இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய இலங்கை சீனியர் அணிக்கு நடத்தப்பட்டகரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதனால் நாளை முதல் பயோபபுள் சூழலுக்குள் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளன். இலங்கை வீரர்கள் பிரமதேசா அரங்கிலும், இந்திய வீரர்கள் சிங்களா விளையாட்டு அரங்கிலும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வீரர்களும் பயோ-பபுள் சூழலக்குள் சென்றபின், ஒவ்வொரு 3-வது மற்றும் 5-வது நாளில் கரோனா பரிசோதனை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கின்றன.