Last Updated : 24 Feb, 2016 02:27 PM

 

Published : 24 Feb 2016 02:27 PM
Last Updated : 24 Feb 2016 02:27 PM

தொடர்ச்சியாக 41-வது வெற்றி: காலிறுதியில் சானியா-ஹிங்கிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சீன ஜோடியை 3 செட்களில் வீழ்த்திய சானியா-ஹிங்கிஸ் ஜோடி தொடர்ச்சியாக 41-வது போட்டியில் வென்றுள்ளது.

சீன ஜோடியான யீ-ஃபான் ஸூ, ஸைசை ஸெங் ஆகியோர் கடும் சவால் அளித்த போதும், சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-4, 4-6, 10-4 என்ற செட்களிஒ போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.

உலகின் நம்பர் 1 மகளிர் இரட்டையர் ஜோடியான சானியா-ஹிங்கிஸ் ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் போராடினர். 2-வது செட்டில் தரவரிசையில் இல்லாத அந்த சீன ஜோடி 6-4 என்று வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

அதன் பிறகு சூப்பர் டை பிரேக்கரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி எழுச்சி பெற்று 10-4 என்று வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x