

# மெக்ஸிகோ ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராக், பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
# இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு மனுமதி வழங்கியுள்ளது.
# மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கும் டி 20 உலகக்கோப்பைக்கான 31 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் சவுத்ரி, வினீத் குல்கர்னி, சிகே நந்தன், ஷம்ஸூதின், ரவி சுந்தரம் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த கேத்லின் கிராஸ், ஆஸி.யை சேர்ந்த கிளாரி போலோஸக் ஆகிய இரு மகளிர் நடுவர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.