யூரோ கால்பந்து தொடர் அரை இறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் இன்று பலப்பரீட்சை

யூரோ கால்பந்து தொடர் அரை இறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

யூரோ கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.

இங்கிலாந்து அணியானது லீக் சுற்றில் குரோஷியா, செக்குடியரசு அணிகளை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 2-0 எனதோற்கடித்தது. கால் இறுதிச் சுற்றில் 4-0 என்ற கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தியிருந்தது.

டென்மார்க் அணியானது லீக் சுற்றில் பின்லாந்து, பெல்ஜியத்திடம் தோல்வி கண்டிருந்தது. கடைசி ஆட்டத்தில் ரஷ்யாவை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருந்தது. நாக் அவுட் சுற்றில் வேல்ஸ் அணியை 4-0 என்ற கணக்கிலும் கால் இறுதி சுற்றில் 2-1 என்ற கணக்கில் செக்குடியரசையும் வென்றது.

1966-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணியால் பெரிய அளவிலான தொடர்களில் அரை இறுதிச் சுற்றை கடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in