

முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசும் திறன் படைத்தவர் ஹர்திக் பாண்டியா என கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 45 ரன்கள் வித்தி யாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 55 பந்தி லும் 83 ரன்னும், ஹர்திக் பாண்டியா 18 பந்தில் 31 ரன்னும் விளாசினர்.
167 ரன்கள் இலக்குடன் விளை யாடிய வங்கதேச அணியால் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நெஹ்ரா 3 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றி தொடர்பாக தோனி கூறியதாவது:
ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர் ஹர்திக் பாண்டியா. அதை அவர் நமக்கு நிரூபித்துள்ளார். அவர் 4 ஓவர்களை வீசியதைப் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக் கிறது. இது அணியை வலுவூட்டு கிறது. 3 வேகப்பந்து வீச்சாளர்கள், முறையான 2 சுழற்பந்து வீச்சாளர்கள் அமைந்தால் அணியில் மாற்றம் தேவையில்லை.
ஹர்திக்கிற்கு ஆட்டம் அமைந்து விட்டால்15 ரன்கள் கூடுதலாகக் கிடைக்கும். 160 என்பது வெற்றி பெறுவதற்கான ஸ்கோர் என்றால் ஹர்திக் அதனை 165-175 என்று மாற்றுகிறார். இது பந்து வீச்சாளர் களுக்கு நல்லது. அவரைப்போன்ற ஒருவர் அணிக்கு அவசியம்.
நாம் ஹர்திக்கிடம் எந்த வித அறிவுரையும் வழங்க வேண்டிய தில்லை. அவருக்கு ஒன்று மட்டுமே தெரியும். அது பந்தை அடித்து விரட்டுவது. பவுண்டரிக்கு வெளியே தூக்கி அடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அதிக போட்டிகளில் விளையாடுவதன் மூலம் அவர் மேலும் வலுவடைவார்.
முதல் பந்திலிருந்தே பெரிய அளவிலான ஷாட் அடிக்கும் அரிய திறமை உடையவர் ஹர்திக் பாண்டியா. ஆனாலும் டி20 வேறு, 50 ஓவர் கிரிக்கெட் வேறு. இருப்பினும் ஹர்திக் பாண்டியாவிடம் 50 ஓவர்கள் போட்டிகளுக்கான திறமையும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆஷிஷ் நெஹ்ராவிடம் பிடித்தது என்னவெனில் களத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை நூறு சதவீதம் அறிந்திருப்பார். அவரைப்பொறுத்தவரை கவலை தரும் அம்சம் அவரது உடல் தகுதி மட்டுமே. டி 20 ஆட்டம் அவருக்கு பொருத்தமாக உள்ளது. ஒரு குறிப் பிடத்தகுந்த வேகத்தில் அவரால் ஸ்விங் செய்ய முடிகிறது. அவர் டி 20 உலகக்கோப்பை முழுதும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத ஆடுகளத்தில் ரோஹித் சர்மா அருமையாக விளையாடினார். 3 விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்த நிலையில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.
ரோஹித் பந்து வீச்சாளர்களின் வேகத்தை பயன்படுத்திக் கொள் கிறார். பந்து வீச்சு நீளத்துத்துக்கு தகுந்தபடி கட் ஷாட்கள் ஆடுகிறார். மேலும் இறுதி வரை நின்று ஹர்திக்குக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தார். இதனால் தான் ஸ்கோர் 166 ஆனது, இல்லையெனில் 140-145 என்றே இருந்திருக்கும்.
யுவராஜ் சிங்கைப் பொறுத்தவரை 15 ரன்னாக இருந்தாலும் 20 ரன்னாக இருந்தாலும் அவருக்கு அது தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய தாக உள்ளது. மிட் ஆப் திசையில் அவர் அடித்த பவுண்டரி அற்புத மானது. அவரிடமிருந்து இப்படிப் பட்ட ஆட்டத்தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். அவர் தன்னம் பிக்கை பெற்றுவிட்டால் ஒட்டுமொத்த மாக வேறு வகையான வீரராக திகழ் வார். பெரிய ஸ்கோர் ஒன்றை அவரி டமிருந்து நாம் விரைவில் எதிர் பார்க்கலாம். அவரது அணுகுமுறை எனக்குப் பிடித்துள்ளது.
இவ்வாறு கூறினார் தோனி.
கேட்ச்சை தவற விட்டதே திருப்புமுனை
வங்கதேச கேப்டன் மோர்டஸா கூறும்போது, "ரோஹித் சர்மா 21 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஷகிப் அல்ஹஸன் தவறவிட்டார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. எனினும் கேட்ச்சை தவறவிடு ஆட்டத்தின் ஒரு பகுதி தான். ஷகிப் எங்கள் அணியின் சிறந்த பீல்டர்.
ரோஹித் அப்போது ஆட்டமிழந்திருந்தால் எப்படியும் 135 முதல் 145 ரன்களுக்குள் இந்திய அணியை கட்டுப்படுத்தியிருப்போம். ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினார். 15 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். கடைசி கட்டத்தில் தான் சிறப்பாக செயல்பட தவறினோம்" என்றார்.
4 பேரும் 23 ரன்னும்
வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் நெஹ்ரா, அஸ்வின், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 4 ஓவர்கள் வீசி தலா 23 ரன்களை விட்டுக்கொடுத்தனர். எல்லாத விதமான கிரிக்கெட் போட்டியிலும் இதுபோன்று நடப்பது அரிதான விஷயம். ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் இரு வைடுகள் வீசியதால் இவர்களுடன் இணையும் வாய்ப்பை இழந்தார். ஜடேஜா 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.