Published : 18 Jun 2014 04:04 PM
Last Updated : 18 Jun 2014 04:04 PM

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது - ஸ்டூவர்ட் பின்னி

4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை புரிந்த ஸ்டூவர்ட் பின்னி உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

வெற்றி இலக்கான 106 ரன்களை எடுக்க முடியமல் வங்கதேசம் நேற்று 58 ரன்களுக்குச் சுருண்டது. மோகித் சர்மா, பின்னி ஆகியோர் முறையே 4 மற்றும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பவுலிங் கிரீஸில் வைடாகச் சென்று பந்தை உட்புறமாக ஸ்விங் செய்ததில் நேற்று ஸ்டூவர்ட் பின்னிக்கு விக்கெட்டுகள் விழத்தொடங்கின. ஒரு சில பந்துகள் அதே கோணத்தில் உள்ளே வந்து பிறகு நேராகும் அல்லது வெளியே ஸ்விங் ஆகும். மனோஜ் பிரபாகர் வீசும் முறையை ஒத்திருந்தது பின்னி வீசிய முறை.

அவர் கூறியதாவது:

நேராக வீசி ஸ்விங் செய்வதே எனது பலம். அங்கு சூழ்நிலையும் ஸ்விங்கிற்குச் சாதகமாக இருந்தது. எனவே நான் சிறப்பாக வீசியதில் ஆச்சரியமில்லை, ஆனால் உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதினால் துவண்டு போய் விடவில்லை. ஆட்டத்தில் நாம் இல்லை என்ற உணர்வு வரவேயில்லை. இடைவேளையின் போது பேசினோம், குட் லெந்த்தில் வீசி சுலபமான ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் போதும் என்று ஆலோசனை செய்தோம்.

என்று கூறினார் ஸ்டூவர்ட் பின்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x