பொலிவியாவை பந்தாடியது அர்ஜென்டினா

பொலிவியாவை பந்தாடியது அர்ஜென்டினா
Updated on
1 min read

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.

குயாபா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில்அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பப்பு கோமஸ் கோல் அடித்தார். 33-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பையும் 41-வது நிமிடத்தில் அகுரோ அடித்த பாஸையும் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 3-0 என முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் பொலிவியாவின் சாவேத்ரா கோல் அடித்தார்.

65-வது நிமிடத்தில் மார்ட் டின்ஸ் பதிலடி கொடுக்க அர் ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்று லீக் சுற்றை நிறைவு செய்த அர்ஜென்டினா கால் இறுதியில் வரும் 4-ம் தேதி ஈக்வேடார் அணியை எதிர் கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in