

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி பாரீஸில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் தீபிகா, கோமாலிக்கா, அங்கிதா குழு மெக்சிகோவை 5 -1 என்ற செட் கணக்கில் வென்றது.
பின்னர் கலப்பு பிரிவில் தனது கணவர் அனுதானு தாஸூடன் பங்கேற்ற தீபிகா நெதர்லாந்து ஜோடியை 5 -3 என்ற கணக்கில் தோற்கடித்தனர். அடுத்து பெண்களுக்கான தனி நபர் பிரிவில் ரஷ்யாவின் எலினாவை 6- 0 என்ற கணக்கில் எளீதாக வென்று தங்கப் பதக்கத்தை வென்றார் தீப்கா.
இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை அவர் கைபற்றியுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம் உலக வில்வித்தை பெண்கள் தரவரிசை போட்டியில் முதல் இடத்துக்கு அவர் முன்னேறி இருக்கிறார்.
வெற்றி பெற்றது குறித்து தீபிகா கூறும்போது, “ உலகக் கோப்பை போட்டியில் மூன்று பதக்கங்களை நான் வெல்வது இதுதான் முதல் முறை. நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே வேளையில் வரும் போட்டிகளுக்காக கூடுதலாக என்னை நான் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
இதுவரை உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகளில் தீபிகா 9 தங்கப்பதக்கங்களையும், 12 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.