

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக ராஜஸ்தான் வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான், சாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அங்கித் சவான், சாந்த் ஆகியோருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. அஜித் சண்டிலா சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டிருந்தார். அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அஜித் சண்டிலா மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடிய வந்த ஹைக்கன் ஷா ஆகியோருக்கு தண்டனையை முடிவு செய்தவற்காக பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் தலைமையிலான 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு வரும் 24ம் தேதி மும்பையில் கூடுகிறது.
ஹைக்கன் ஷா, ரஞ்சிகோப்பை போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். அவர் ஐபிஎல் அணி ஒன்றின் வீரரை தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசியதாக பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.