Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

யூரோ கால்பந்து தொடரில் லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த போதிலும் நாக் அவுட் சுற்றில் நுழைந்தது சுவிட்சர்லாந்து

யூரோ கால்பந்து தொடரில் மற்றபிரிவுகளின் ஆட்டங்களின் முடிவால் பந்தை உதைக்காமலேயே சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியிருந்தது. இந்த பிரிவில் இத்தாலி 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முதல்அணியாக தகுதி பெற்றது. சுவிட்சர்லாந்து, வேல்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் வேல்ஸ் அணி 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது.

இதனால் சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்தது. ஏனெனில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைவதற்கு, லீக் சுற்றின் முடிவில் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து இருக்க வேண்டும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை அந்த அணி பெற்ற வெற்றியின் பின்னர் அவர்களின் தலைவிதி தெளிவாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் பி மற்றும் சி பிரிவு லீக் ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் முடிவடைந்தன. இந்த இரு பிரிவிலும் 3-வது இடம் பிடித்த பின்லாந்து, உக்ரைன் அணிகள் தலா 3 புள்ளிகளை மட்டுமே பெற்றன. இதன் காரணமாக ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பின்லாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. அதேவேளையில் உக்ரைன் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்திருந்தது.

உக்ரைன் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தன. இந்த இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பதுமற்ற பிரிவுகளில் 3-ம் இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலைமையை அடிப்படையாக கொண்டே இருக்கும்.

திங்கட்கிழமை முடிவுற்ற ஆட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து, பிரான்ஸ், சுவீடன், செக்குடியரசு ஆகிய அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களை விளையாடுவதற்கு முன்னதாகவே நாக் அவுட் சுற்றில் நுழைவதை உறுதிப்படுத்திக்கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x