Last Updated : 23 Jun, 2021 03:11 AM

 

Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: கோபா அமெரிக்கா தொடரின் வரலாறு

கால்பந்து ரசிகர்களுக்கு இது இரட்டை மகிழ்ச்சியைத் தரும் மாதமாக உள்ளது. ஒருபுறம் ஐரோப்பிய கால்பந்து போட்டி, மறுபுறம் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி என இரவு முழுவதும் கால்பந்து போட்டிகள், ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. இதில் ஐரோப்பிய கால்பந்து போட்டியைப் பற்றி ஏற்கெனவே இப்பகுதியில் பார்த்துள்ளோம். இப்போது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியைப் பற்றி தெரிந்துகொள்வோம்:

கால்பந்து போட்டிகளிலேயே மிகவும் பழமையான போட்டியாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கருதப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகள் கலந்துகொள்ளும் இப்போட்டி, கடந்த 1916-ம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து அர்ஜென்டினா விடுதலை பெற்றதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 1916-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், உருகுவே அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஆரம்பத்தில் தென் அமெரிக்க கால்பந்து சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்பட்ட இப்போட்டி, 1975 முதல் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி என அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தொடராக இது இருந்தாலும், சில முறை தென் அமெரிக்காவைத் தாண்டியுள்ள சில சிறந்த கால்பந்து அணிகளை இப்போட்டியில் பங்கேற்க சிறப்பு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இப்போட்டியில் ஆடியுள்ளன.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு என்ற பெருமை உருகுவே அணிக்கு உள்ளது. அந்த அணி இதுவரை 15 முறை கோப்பையை வென்றுள்ளது. உருகுவே அணிக்கு அடுத்ததாக அர்ஜென்டினா, 14 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x