Published : 17 Dec 2015 11:50 AM
Last Updated : 17 Dec 2015 11:50 AM

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி: உத்தரபிரதேசம் வெற்றி - ரெய்னா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ரெய்னா தலைமையிலான உத்தரபிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஸ்டிரா அணியை தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சவுராஸ்டிரா 48.5 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது. புஜாரா 41, அர்பித் வசவாடா 39 ரன் எடுத்தனர். உத்தர பிரதேசம் தரப்பில் பியூஸ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உத்தர பிரதேசம் 44.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவுபே 85, திவேதி 39, ரெய்னா 18 ரன் எடுத்தனர்.

இமாச்சல் பிரதேசம் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் இமாச்சல் பிரதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவா அணியை வென்றது. முதலில் ஆடிய கோவா 45.4 ஓவரில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கமாத் 57, அஸ்நோத்கர் 37 ரன் எடுத்தனர். இமாச்சல் பிரதேசம் தரப்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட் வீழ்த்தினார். எளிதான இலக்குடன் ஆடிய இமாச்சல் பிரதேசம் 29.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சோப்ரா 67 ரன் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x