ஐஎஸ்எல் அரையிறுதி: கோவா-டெல்லி இன்று மோதல்

ஐஎஸ்எல் அரையிறுதி: கோவா-டெல்லி இன்று மோதல்
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், எப்.சி. கோவா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

4 ஆட்டங்களை கொண்ட அரையிறுதி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட அரையிறுதியில் டெல்லி 1-0 என்ற கோல் கண்கில் கோவாவை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு படோர்டாவில் நடைபெறும் 2வது கட்ட அரையிறுதியில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அடிக்கும் கோல்களின் சராசரி அடிப்படையில் இறுதி போட்டிக்கு முன்னேறும் அணி முடிவாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in