உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 18) நியூஸிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடக்கூடிய 15 பேர் கொண்ட அணியை நேற்று (புதன்கிழமை) இந்திய அணி அறிவித்தது.

இதில் விராட் கோலி, ஷுப்மன் கில், ரோஹித் சர்மா, புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விருத்தமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

தற்போது போட்டியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் கொண்ட பட்டியலை அணி வெளியிட்டுள்ளது. பலர் ஊகித்தது போல இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்கள் என்கிற அமைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, விருத்தமான் சாஹா, முகமது சிராஜ் உள்ளிட்டவர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட 15 பேர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், இறுதியில் 11 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்டிருக்கும் 11 பேர் கொண்ட அணி:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in