தென்மண்டல கால்பந்து: கர்நாடகா, புதுச்சேரி வெற்றி

தென்மண்டல கால்பந்து: கர்நாடகா, புதுச்சேரி வெற்றி
Updated on
1 min read

தென்மண்டல அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் கர்நாடகா, புதுச்சேரி அணிகள் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு கால்பந்து சங்கம் நடத்தும் தென்மண்டல அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டிகள் திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 5 மாநில சீனியர் பெண்கள் அணியினர் பங்கேற்றுள்ள இப்போட்டியை தமிழ்நாடு கால்பந்து கழக மகளிர் குழுத் தலைவர் சீனி மொஹைதீன் தொடங்கி வைத்தார்.

நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கர்நாடகா 3-1 என்ற கோல் கணக்கில் தெலங்கானாவை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் புதுச்சேரி 5-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணியை வென்றது.

வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள போட்டிகளில் தெலங்கானா - கேரளா அணிகளும், புதுச்சேரி - கர்நாடகா அணிகளும் மோத உள்ளன. இப்போட்டிகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in