

இலங்கை- நியூஸிலாந்து அணிகள் இன்று 3வது ஒருநாள் போட்டியில் நெல்சன் நகரில் மோதுகின்றன.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தி யாசத்திலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 3வது ஆட்டம் நெல்சன் நகரில் இன்று அதிகாலை இந்திய நேரப் படி 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
நியூஸிலாந்து தொடரை வெல் லும் முனைப்புடன் களம் காண்கி றது. இதற்கிடையே கேப்டன் பிரண்டன் மெக்கலம் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளி யாகி உள்ளது.
அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள வில்லி யம்சன், வேகப்பந்து வீச்சாளர் மில்னே ஆகியோர் இன்று கள மிறங்குகின்றனர். மெக்கலம் கள மிறங்காத பட்சத்தில் வில்லியம் சன் கேப்டனாக அணியை வழி நடத்துவார். டெஸ்ட் தொடரை இழந்து இலங்கை அணி ஒருநாள் போட்டி தொடரில் மோசமாக விளை யாடி வருகிறது. மைதானம் வேகப் பந்து வீச்சுக்கே முற்றிலும் சாதக மாக இல்லாத நிலையிலும் தவறான ஷாட்களை ஆடி விக் கெட்களை பறிகொடுக்கின்றனர். கடும் விமர்சனங்களை சந்தித் துள்ள அந்த அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். அதனால் சற்று கவன முடன் செயல்படக்கூடும்.