

துபாயில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டி 2021்-ல்(ASBC) யில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம்,3 வெற்றி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர்.
மேரி கோம்(51கிலோ), லால்புட்சாஹி(64கிலோ), அனுபமா(81கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர்(60கிலோ), லோவ்லினா போர்கோஹெயின்(69கிலோ), ஜாஸ்மின்(57கிலோ), சாக்ஸி சவுத்ரி(54கிலோ), மோனிகா(48கிலோ), சாவித்ரி(81கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
நடப்பு சாம்பியன் பூஜா ராணி 75 கிலோ எடைபிரிவில் மீண்டும் தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். மேரி கோம் 51 கிலோ எடை பிரிவில் வெள்ளி வென்றார்.
ஆசியக்குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய வீராங்கனை பூஜா ராணி தனது 2-வது தங்கத்தை வென்றார். இறுதிசுற்றில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை மவுலுடா மோலோனோவாவை 0-5 என்ற கணக்கில் வீழ்த்தி பூஜா ராணி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசியக் குத்துச்சண்டைப் பிரிவில் பூஜா ராணி பெறும் 4-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டில் தங்கம், 2021ல் வெள்ளி, 2015ல் வெண்கலப் பதக்கத்தை பூஜா வென்றுள்ளார்.
51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் அரையிறுதியில் 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை நாஸ்யம் ஜாய்பேயிடம் தோல்வி அடைந்தார். ஆசியக் குத்துச்சண்டைப் பிரிவி்ல் மேரி கோம் வெல்லும் 2-வது வெள்ளிப்பதக்கம் இதுவாகும்.
இதற்கு முன் 2008ல் வெள்ளி வென்றிருந்தார், 2003,2005,2010, 2012ம் ஆண்டுகளில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை மேரி கோம் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீராங்கனை லால்புட்சாஹி அரையிறுதியில் 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை மிலானா சபரோவாவிடம் தோல்வி அடைந்து வெள்ளி வென்றார்.
81 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனுபமா அரையிறுதி சுற்றில் 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை லாஜட் குங்கிபேவாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
ஆடவர் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமித் பங்கல்(52கிலோ), ஷிவா தபா(64கிலோ), சஞ்சீத்(91கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
அமித் பங்கல் இன்று நடக்கும் இறுதிச்சுற்றில் உலக சாம்பியனும் உஸ்பெகிஸ்தான் வீரருமான ஜோய்ரோவ் சகாபுதீனை எதிர்கொள்கிறார். ஷிவா தபா தனது தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மங்கோலியா வீரர் பட்டார்சுக் சின்ஜோரிக்குடன் மோதுகிறார். விகாஸ் கிருஷ்ணன்(69கிலோ), வரிந்தர் சிங்(60கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தனர்.