

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் தமிழக அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது.
முதலில் பேட்செய்த ஹைதராபாத் 49.2 ஓவரில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தன்மே அகர்வால் 105, பிரின்ஸ் 31 ரன் எடுத்தனர். தமிழகம் தரப்பில் பாலாஜி 3, அஸ்வின், சதீஷ், சங்கர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய தமிழக அணி 47.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 55, முரளி விஜய் 44 ரன் எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் ரவி கிரன் 2 விக்கெட் கைப்பற்றினார். தமிழக அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்தது.
கேரளா 49 ரன்
பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா-கேரளா மோதின. முதலில் பேட்செய்த கேரளா 22 ஓவரில் 49 ரன்களுக்கு சுருண்டது. 4 வீரர்கள் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சச்சின் பேபி 12, சுரேந்த்ரன் 11 ரன் எடுத்தனர். கர்நாடகா தரப்பில் கோபால் 5 விக்கெட் வீழ்த்தினார். மிக எளிதான இலக்குடன் ஆடிய கர்நாடகா 5.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 19, நாயர் 24 ரன் எடுத்தனர்.
பரோடா, விதர்பா வெற்றி
டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுராவை பரோடா அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த திரிபுரா 22.2 ஓவரில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முராசிங் 10 ரன் எடுத்தார். பரோடா தரப்பில் ஸ்வாப்நில் சிங் 5, யூசுப் பதான் 3 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய பரோடா 6.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அம்பாட்டி ராயுடு 31 ரன் எடுத்தார்.
ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆந்திரா 25.3 ஓவரில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரசாந்த் 38 ரன் எடுத்தார். விதர்பா தரப்பில் கர்னிவார் 4 விக்கெட் கைப்பற்றினார். எளிதான இலக்குடன் ஆடிய விதர்பா 19.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்மா 47, பஸால் 44 ரன் எடுத்தனர்.
தோனி 37 ரன்
ஆளுரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்கண்ட் 115 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது. 45 ஓவர்களா நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்தது. சவுரப் திவாரி 49, தியோபிரட் 38 ரன் எடுத்தனர்.
தோனி 30 பந்தில், 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 37 ரன் சேர்த்தார். 212 ரன்கள் இலக்குடன் ஆடிய ரயில்வேஸ் 37 ஓவரில் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜார்கண்ட் தரப்பில் சோனுசிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.