Published : 26 May 2021 15:13 pm

Updated : 26 May 2021 15:13 pm

 

Published : 26 May 2021 03:13 PM
Last Updated : 26 May 2021 03:13 PM

ஐசிசி ஒருநாள் தரவரிசை: பந்துவீச்சாளர்களில் வங்கதேச வீரர் மெஹதி ஹசன் புதிய சாதனை: இந்திய வீரர் ஒருவருக்கு மட்டுமே இடம்

icc-odi-player-rankings-mehidy-hasan-rises-to-number-two-on-bowlers-list
வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் | கோப்புப்படம்

துபாய்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலி்ல் பந்துவீச்சாளர்களில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம் பிடித்த 3-வது வங்கதேச வீரர் எனும் பெருமையை மெஹதி ஹசன் பெற்றார். இதற்கு முன் சஹிப் அல் ஹசன் 2009ம் ஆண்டில் முதலிடத்திலும், 2010ம் ஆண்டும் அப்துர் ரஹிம் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.


இலங்கைக்கு எதிராக தாகாவில் நடந்து வரும் ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியத் தொடர்ந்து மெஹதி ஹசன் 3 இடங்கள் நகர்ந்து 725 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் உள்ளார்.

வங்கதேச இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 8 இடம் நகர்ந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு 5-வது இடம் வரை ரஹ்மான் முன்னேறியதுதான் சிறந்ததாகும்.

3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மானும், 4-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மாட் ஹென்றியும் உள்ளனர். 5-வது இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். 6 முதல் 10 இடங்கள் வரை முறையே காகிசோ ரபாடா, கிறிஸ் வோக்ஸ், ஹேசல்வுட், கம்மின்ஸ் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய அணியி்ன் கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடனும், 825 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் வரிசையில், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 295 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். மற்ற எந்த இந்திய வீர்களும் இதில் இல்லை.


தவறவிடாதீர்!

ICC ODI Player RankingsMehidy HasanBowlers' listBangladesh off-spinnerICC Men's ODI PlayerSri Lankaஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசைவங்கதேசம்மெஹதி ஹசன்2வது இடத்தில் மெஹதி ஹசன்இலங்கையுடன் ஒருநாள் தொடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x