கரோனாவால் பாதித்தவர்களுக்காக 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கும் பிசிசிஐ

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. இதனால் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நீண்ட காலமாக மருத்துவத் துறையும், சுகாதாரத் துறையும் போரிட்டு வருகிறது. அவர்கள் உண்மையாகவே முன்னணி வீரர்களாக இருந்து நம்மை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 10 லிட்டர் திறன் கொண்ட 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கிருணல் பாண்டியா....

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சகோதரர்களான கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கிராமப்புறங்களுக்கு உதவும் வகையில் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்தனர். இதன் ஒரு கட்டமாக அவை கிராமப்புற சேவைகளுக்கு பயன்படும் வகையில் அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ள புகைப்படத்தை கிருணல் பாண்டியா நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in