கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக கபடி வீராங்கனை தேஜஸ்வினிக்கு ரூ.2 லட்சம் நிதி: விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி

வி.தேஜஸ்வினி பாய்
வி.தேஜஸ்வினி பாய்
Updated on
1 min read

இந்திய கபடி மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான வி.தேஜஸ்வினி பாயும் அவரது கணவர் நவீனும் கடந்த மே 1-ம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்றில் இருந்து தேஜஸ்வினி மீண்டு வரும் நிலையில் நவீன் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வினிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தேஜஸ்வினி அர்ஜூனா விருது பெற்றவர். 2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் தேஜஸ்வினி விளையாடியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in