

பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படும் ஒலிம்பியனும் இந்திய தடகள ஜாம்பவானுமான மில்கா சிங்குக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
91 வயதான அவர், சண்டிகரின் செக்டார் 8-ல் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்கா சிங்குக்கு101 டிகிரி காய்ச்சல் தொடர்ந்துஇருந்து வந்ததைத் தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்துபார்க்கப்பட்டதில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கூறும்போது, “அவர் நன்றாக இருக்கிறார், அவரது உடல் நலன் சீராகவே உள்ளது. ஆனால் அவருக்கு 91 வயதாகிவிட்டதால் கவலையாக உள்ளது. உள்ளூர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு உதவியாளரை ஆக்சிஜன் வசதிகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர் விரைவாக குணமடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். அவர், கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை” என்றார்.