ஆஷஸ் அட்டவணை வெளியீடு: பெண்கள் ஆஷஸ் தொடரும் அறிவிப்பு

ஆஷஸ் அட்டவணை வெளியீடு: பெண்கள் ஆஷஸ் தொடரும் அறிவிப்பு
Updated on
1 min read

2021-22-ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் என இம்முறை இரண்டு ஆஷஸ் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து இந்த அட்டவணையை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் இந்த ஆஷஸ் தொடரில் இம்முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது.

வழக்கமான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் டிசம்பர் 8ஆம் தேதி நடக்கும். இரவு பகலாக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் பொபொட்டி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 தொடங்கும். பாரம்பரிய பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கும். நான்காவது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் ஜனவரி 5 அன்றும், கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்றும் நடைபெறவுள்ளன.

26 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக சிட்னி அல்லாத வேறொரு மைதானத்தில் இறுதி ஆஷஸ் டெஸ்ட் நடப்ப்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஆஷஸ் தொடர் ஜனவரி 27ஆம் தேதி கேன்பெர்ரா மைதானத்தில் நடக்கும். வெறும் டெஸ்ட் போட்டிகளாக மட்டுமில்லாமல், டி20, ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளும் மகளிர் ஆஷஸில் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு பிப் 4, 6, 10 ஆகிய தேதிகளில் முறையே மூன்று டி20 போட்டிகள் நடக்கின்றன. தொடர்ந்து பிப். 13, 16, 19 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

மகளிர் ஆஷஸ் தொடரின் முடிவில், இங்கிலாந்து அணி, ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பங்குபெற நியூஸிலாந்து பயணப்படவுள்ளது. ஆஷஸ் தொடர் துவங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய ஆடவர் அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in