

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இரு அணி களுக்கு இடையேயான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்த தொடரில் ஆடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது. இந்திய அரசும் இதைப்பற்றி எதுவும் கூறாமல் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவில் வரும் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்பது பற்றி பாகிஸ்தான் யோசித்து வருகிறது.
இந்நிலையில் கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ் தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பேசிய தாவது: இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது. இது பாகிஸ்தான் அணியின் எதிர்கால நலனை மிகவும் பாதிக்கும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது இரு நாடுகளுக்கும் நல்லது. அதே நேரத்தில் இந்தியா நம்மோடு விளையாடாவிட்டாலும் அது நம்மை பெரிதாக பாதிக் காது. இரு நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி நடந்தாலும், நடக்காவிட்டாலும் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு வாசிம் அக்ரம் பேசினார்.