

இந்த ஆண்டில் இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
2015ம் ஆண்டில் இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வீரர்களின் பட்டியலை குகூள் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின், கோலியின் வசம் கேப்டன் பதவி வந்தது. அவர் தலைமையில் இந்திய அணி இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தான் இணையத்தள தேடலில் முதலிடம் வகிப்பார். ஆனால் இம்முறை விராட் கோலி அந்த இடத்தை பிடித்துள்ளார். மெஸ்ஸி 2வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்திலும், தோனி 4வது இடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர்.
2013ல் ஓய்வு பெற்ற சச்சின், கடந்த மாதம் அமெரிக்காவில் ஆல் ஸ்டார் டி 20 தொடரை நடத்தியதால் இணையத்தள தேடல் வாசிகளின் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். இந்த பட்டியலில் டாப் 10ல் இந்திய வீரர்கள் 6 பேர் இடம் பிடித்தனர்.
பெண்களில் சானியா மிர்சா மட்டுமே இடம் பிடித்தார். அவர் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். 6வது இடத்தில் ரோஜர் பெடரர், 8வது இடத்தில் ரோஹித் சர்மா, 9வது இடத்தில் யுவராஜ் சிங், 10வது இடத்தில் ஜோகோவிக் உள்ளனர்.