நெய்மார் பெனால்டி கிக் : குரேஷிய மேலாளர் கடும் தாக்கு

நெய்மார் பெனால்டி கிக் : குரேஷிய மேலாளர் கடும் தாக்கு
Updated on
1 min read

உலகக் கோப்பைக் கால்பந்து முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய பெனால்டி கிக் கொடுத்த ஜப்பானிய நடுவர் மீது குரேஷிய அணி மேலாளர் நிகோ கோவக் கடும் விமர்சனம் வைத்தார்.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் குரேஷிய வீரர் லவ்ரென், பிரேசில் வீரர் ஃபிரெட் என்பவரை முறை தவறித் தடுத்ததாக ஜப்பானிய நடுவர் நிஷிமோரா பிரேசில் சார்பாக பெனால்டி கிக் கொடுத்தார். நெய்மார் அதனை கோலாக மாற்றியது பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது.

நடுவரின் இந்த முடிவு மிகவும் தவறானது என்கிறார் நிகோ கோவக், “அது பெனால்டி என்றால் நாங்கள் கால்பந்து ஆடவேண்டியத் தேவையில்லை. கூடைப்பந்துதான் ஆடவேண்டும். ஏனெனில் அது கூடைப்பந்தாட்டத்தில்தான் பெனால்டி ஆகும்.

நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று ஆடவந்தோம், ஆனால் இங்கு இந்த வகை ஆட்டத்திற்கு லாயக்கற்ற ஒரு நடுவர் பணியாற்ற வைக்கப்படுகிறார். இனி விளையாடுவது என்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஏனெனில் இது இழிவானதாகும்.

மேலும் லுகா மோட்ரிக்கை நெய்மார் முழங்கையை வைத்து தடுத்தது நெய்மாருக்கு சிகப்பு அட்டை வழங்க வேண்டிய ஃபவுல் ஆகும். ஆனால் கொடுக்கப்படவில்லை”

இவ்வாறு கூறினார் நிகோ கோவக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in