பெடரேஷன் கோப்பைக்கு சானியா மிர்சா கேப்டன்

பெடரேஷன் கோப்பைக்கு சானியா மிர்சா கேப்டன்
Updated on
1 min read

பெடரேஷன் கோப்பைக்கான இந் திய டென்னிஸ் அணிக்கு சானியா மிர்சா கேப்டனாக நியமிக்கப்பட் டுள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தாய்லாந் தில் பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆசியா-ஓஸியானா பிரிவில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்ட னாக, பெண்கள் இரட்டையர் பிரி வில் நம்பர் ஒன் வீராங்கனையான திகழும் சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை நேற்று அனைத்திந்திய டென்னிஸ் அஸோ சியேஷன் வெளியிட்டது. மேலும் எஸ்.பி.மிஸ்ரான தலைமையிலான தேர்வுக்குழுவினர் குஹாட்டியில் பிப்ரவரி மாதம் நடைபெறும் தெற்கு ஆசிய போட்டியில் பங்கேற் கும் இந்திய அணியையும் தேர்வு செய்துள்ளது. சானியா மிர்சா தலை மையிலான அணியில் அங்கிதா ரெய்னா, பிரேர்ணா பாம்ப்ரி, பிராத் தனா தாம்ப்ரே இடம் பிடித்துள்ளனர். கவுர் தண்டி மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தெற்கு ஆசிய போட்டியில் ஆண்கள் பிரிவில் சகத் மையினி, ராம்குமார் ராமநாதன், ஷனம் சிங், விஜய் சுந்தர், பிரசாந்த், புரவ் ராஜா, திவிஜ் ஷரண் ஆகியோர் பங்கேற் பார்கள் என தெரிவிக்கப்பட் டுள்ளது. ஜீவன் நெடுஞ்செழியன் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் அங்கிதா, ரஷிகா சுன்கரா, நடாஷா பல்ஹா, பிரேர்ணா பாம்ப்ரி, பிராத்தனா தாம்ப்ரே, ஷர்மதா பாலு ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in