Last Updated : 09 May, 2021 06:59 AM

 

Published : 09 May 2021 06:59 AM
Last Updated : 09 May 2021 06:59 AM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கரோனா தொற்று

கோப்புப்படம்

பெங்களூரு

கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ,அந்த அணியின் விக்ெகட் கீப்பரும் நியூஸிலாந்து வீரருமான டிம் ஷீபெர்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் பிரசித் கிருஷ்ணா தனது சொந்த ஊரான பெங்களூருவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 25 வயதான பிரசித் கிருஷ்ணா, இம்மாதம் இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார், இப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

கொல்கத்தா அணியிலிருந்து கரோனாவில் பாதிக்கப்படும் 4-வது வீரர் பிரசித் கிருஷ்ணா. இதற்கு முன் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், நியூஸிலாந்து வீரர் டிம் ஷீபெர்ட் ஆகியோர் கரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

சக்ரவரத்தியும், சந்தீப் வாரியரும் பயிற்சியின்போது ஒன்றாக இருந்ததால், கரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதில் வருண் சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர் பிரசித் கிருஷ்ணா என்பதால் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் பயோ-பபுளைவிட்டு பிரசித் கிருஷ்ணா விலகும்போது, அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் 2 முறையும் நெகட்டிவ் வந்தது. ஆனால், சொந்த ஊரான பெங்களூருக்குச் சென்று அங்கு கரோனா பரிசோதனை நடத்தியபோது தொற்று உறுதியானது.

இங்கிலாந்துக்கு வரும் 25ம் தேதி பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா செல்லும்முன், அணியின் பயோ-பபுளுக்குள் செல்ல கரோனா நெகட்டிவ் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிலாந்து தொடரிலிருந்து பிரசித் கிருஷ்ணா நீக்கப்படலாம்

நியூஸிலாந்து வீரர் ஷீபெர்ட்

இதில் நியூஸிலாந்து வீரர் டிம்ஷீபெர்ட்டுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

நியூஸிலாந்து புறப்படும் முன் நடத்தப்பட்ட இரு கரோனா பரிசோதனையிலும் டிம் ஷீபெர்ட்டுக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. கடந்த 10 நாட்களில் 7 முறை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் ஷீபெர்ட்டுக்கு நெகட்டிவ் வந்தது. ஆனால், நியூஸிலாந்து புறப்படும் முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாஸிட்டிவ் வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x