இந்திய கிரிக்கெட் வீரர் பிரஷித் கிருஷ்ணாவுக்கு கரோனா

இந்திய கிரிக்கெட் வீரர் பிரஷித் கிருஷ்ணாவுக்கு கரோனா
Updated on
1 min read

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வேகப்பந்து வீச்சாளரும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான பிரஷித் கிருஷ்ணாவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் 4வது வீரர் பிரஷித் கிருஷ்ணா ஆவார். இதற்கு முன்னர் இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் நியூஸிலாந்தின் டிம் ஷெய்பர்ட் ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வீரர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 25 வயதான பிரஷித் கிருஷ்ணா மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரஷித் கிருஷ்ணா , பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in