

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 180 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணியின் வெற்றியில் ஆல்ரவுண்டரான ஹர்பிரீத் பிரார் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கின் போது இறுதிக்கட்டத்தில் 25 ரன்கள் விளாசியிருந்தார் ஹர்பிரீத் பிரார்.
போட்டி முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கை பஞ்சாப் அணி சிறப்பாக தொடங்கியது. எனினும் நாங்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் இழுத்து கொண்டு வந்தோம். ஆனால் இறுதியில் 25 ரன்களை கூடுதலாக வழங்கிவிட்டோம், 160 ரன்களே இலக்காக இருந்திருக்க வேண்டும். திட்டங்களை செயல்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஆனால் இறுதிப் பகுதியில் விலகிச் சென்றுவிட்டோம். பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்" என்றார்.
இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் - ராஜஸ்தான்
இடம்: டெல்லி
நேரம்: பிற்பகல் 3.30பஞ்சாப் - டெல்லி
இடம்: அகமதாபாத்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்