Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

ஐபிஎல் போட்டியில் 5 ஆட்டங்களில் தோல்வி எதிரொலி; வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும்: கொல்கத்தா பயிற்சியாளர் மெக்கலம் வலியுறுத்தல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 155 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியானது பிரித்வி ஷாவின் அதிரடியால் 21 பந்துகள் மீதம் வைத்து வென்றது. பிரித்வி ஷா 41 பந்துகளில், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். அதிலும் அவர், ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிகளுக்கு விரட்டி அசத்தியிருந்தார்.

கொல்கத்தா அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 7 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கலம், கேப்டன் இயன் மோர்கன் ஆகியோர் எப்போதுமே ஆக்ரோஷமான ஆட்டத்தை கையாளக் கூடியவர்கள். ஆனால் இந்த சீசனில் அந்த அணி இதை செய்யவில்லை.

மெக்கலம் கூறும்போது, “ஒரு வீரராக நீங்கள் தேர்வுக்கு வரும்போது சுதந்திரம், நம்பிக்கை மற்றும் விசுவாசம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. களத்துக்கு சென்று ஆட்டத்தை கையில் எடுத்து, விஷயங்களை முயற்சித்து ஆக்ரோஷமாக இருந்தால் உங்கள் அணிக்காக ஏதேனும் நடக்கும். அதுதான் நானும், கேப்டனும் மோர்கனும் எங்கள் வீரர்களிடம் கேட்டுள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்குத் தேவையான அளவுக்கு அது கிடைக்கவில்லை. பிரித்வி ஷா ஆட்டமானது நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதற்கு சரியான வடிவமாக இருந்தது.

நீங்கள் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிகள் அல்லது சிக்ஸர் களுக்கு விளாச முடியாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் பல ஷாட்களை விளையாடவில்லை, காகிதத்தில் பேட்டிங் வரிசை சிறப்பாகவே உள்ளது. ஆனால் செயல்பாட்டில் இல்லை.

டி 20 கிரிக்கெட்டில், நீங்கள் ஒரு பவுண்டரி அடித்த பிறகு முயற்சி செய்து எதிரணிக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். பவுண்டரி அடித்த பிறகு இன்னொன்றைத் தேட வேண்டும். இல்லாவிட்டால் கடினம். வீரர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்படி கேட்டுள்ளேன், நாங்கள் தொடர்ந்து அதைச் செய்யவில்லை, நிச்சயமாக நாங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x