

கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 90,000 ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்காக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை (ரூ.29.12 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், பிற வீரர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் வர்ணனையாளருமான பிரெட் லீ 1 பிட்காயினை நிதியாக வழங்கினார்.
இந்த நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, டொனேட்கார்ட் என்ற தன்னார்வ நிறுவனத்திற்கு சுமார் 90,000 ரூபாயை ஆக்சிஜன் விநியோகத்துகாக நிதியாக வழங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தைக் குறிப்பிட்டு கோஸ்வாமி, “என்னால் உதவி செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. நீங்களும் உதவுங்கள். நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.