Published : 26 Apr 2021 03:17 am

Updated : 26 Apr 2021 03:55 am

 

Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:55 AM

விளையாட்டாய் சில கதைகள்: போதையால் இழந்த பெருமை

sports-story

கோகைன் எனப்படும் போதை மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி அர்ஜென்டினா கால்பந்து வீரர் டியாகோ மரடோனா, இவ்விளையாட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாள் ஏப்ரல் 26, 1991.

இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அப்படித்தான் அர்ஜென்டினாவின் கால்பந்து விளையாட்டுக்கு டியாகோ மரடோனா. அர்ஜென்டினாவின் புவனஸ் ஏர்ஸ் நகருக்கு அருகில் உள்ள லானஸ் என்ற ஊரில் 1960-ம்ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த மரடோனா, ஏழ்மையால் சூழப்பட்ட பகுதிகளில் தனது சிறு வயதைக் கழித்தார். வறுமையின் பிடியில் இருந்து மீள, கால்பந்து ஒன்றுதான் வழி என்று அவ்விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். கால்பந்தும் அவரது கால்களுக்கு கட்டுப்பட்டது.


உள்ளூர் கால்பந்து போட்டிகளில் சிறு வயது முதலே ஆதிக்கம் செலுத்திய மரடோனா, 1977-ம்ஆண்டில், தனது 17 வயதில் அர்ஜென்டினா அணியில் இணைந்தார். 1994-ம் ஆண்டுவரை அர்ஜென்டினா அணிக்காகவும், பல்வேறு கிளப்களுக்காகவும் நூற்றுக்கணக்கான கால்பந்து போட்டிகளில் ஆடியவர் மரடோனா. 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த மரடோனா, அர்ஜென்டினா அணிக்காக 34 கோல்களையும், நெபோலி, பார்சிலோனா உள்ளிட்ட பல்வேறு கிளப்களுக்காக 311 கோல்களையும் அடித்துள்ளார்.

கால்பந்து உலகில் உச்சத்தில் இருந்த நேரத்தில், 1991-ம் ஆண்டு, கோகைன் எனப்படும் போதை மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி கால்பந்து போட்டிகளில் ஆட, மரடோனாவுக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இதன்பிறகு மீண்டு வந்தாலும் முன்புபோல அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை. கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வுபெற்று, பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். இருப்பினும் போதைப் பழக்கம் அவரை விடாமல் துரத்தியது. கடைசியில் 2020-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மரடோனா காலமானார்.



Sports storyவிளையாட்டாய் சில கதைகள்போதையால் இழந்த பெருமை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x