

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் உட்பட 10 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் போபாலில் நடைபெற்ற விளையாட்டு விருதுகள் வழங்கும் அரசு விழாவில் சானியா பங்கேற்க ரூ.5 லட்சம் கேட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை சானியா மிர்சா தரப்பினர் மறுத்துள்ளனர்.
போபாலில் இருந்து கோவா செல்ல தனியார் விமானம் ஏற்பாடு செய்து தருமாறு மட்டுமே கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.