எம்.எஸ்.தோனியின் பெற்றோருக்கு கரோனா தொற்று

சிஎஸ்கே கேப்டன் தோனி | கோப்புப்படம்
சிஎஸ்கே கேப்டன் தோனி | கோப்புப்படம்
Updated on
1 min read

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனியின் பெற்றோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஞ்சியில் உள்ள பல்ஸ் பன்முக சிகிச்சை மருத்துவமனையில் தோனியின் பெற்றோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி பங்கேற்று வருவதால், பயோ-பபுள் சூழலில் இருந்து அவரால் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.

ராஞ்சியில்உள்ள பல்ஸ் மருத்துவமனை கூறுகையில், “எம்.எஸ்.தோனியின் தந்தை பன் சிங், தாய் தேவகி தேவி இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது. ஆக்ஸிஜன் அளவும் சீராக இருக்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிஎஸ்கே அணி மும்பையில் விளையாடி வருகிறது. அடுத்த 2 போட்டிகள் முடிந்தபின், சிஎஸ்கே அணி, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் உள்ளது. இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே அணி.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 22்-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்கும், ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in