தென்மண்டல கால்பந்து: கேரளா, புதுச்சேரி வெற்றி

தென்மண்டல கால்பந்து: கேரளா, புதுச்சேரி வெற்றி
Updated on
1 min read

திருச்சியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் கேரளா, புதுச்சேரி அணிகள் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் தென்மண் டல அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டிகள் திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கேரளா 5-2 என்ற கோல் கணக்கில் தெலங்கானாவை தோற் கடித்தது. தெலங்கானாவுக்கு இது 2வது தோல்வி ஆகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்திருந்தது. மற்றொரு ஆட்டத்தில் புதுச்சேரி, கர்நாடகா அணிகள் மோதின. இதில் புதுச்சேரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புதுச்சேரி அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தமிழகத்தை வென்றிருந்தது.

நாளை (23ம் தேதி) தெலங் கானா - தமிழ்நாடு மற்றும் கர்நாடகா- கேரளா அணிகள் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in