ரஷித் கானுடன் இணைந்து ரம்ஜான் நோன்பிருந்த வார்னர், வில்லியம்சன்

ரஷித் கானுடன் இணைந்து ரம்ஜான் நோன்பிருந்த வார்னர், வில்லியம்சன்
Updated on
1 min read

சன் ரைசஸ் அணி வீரர் ராஷித் கானுடன் இணைந்து சக வீரர்களாக வார்னரும், வில்லியம்சனும் ரம்ஜான் நோன்பு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

20- 20 கிரிக்கெட் போட்டிகளின் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் இது ரம்ஜான் மாதம் என்பதால் நோன்பு இருந்து வருகிறார். இதில் ரஷித் கானுடன் இணைந்து அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான வார்னரும், வில்லியம்சனும் நோன்பு இருந்தனர்.

இந்த வீடியோவை ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மத வேற்றுமைகளை மறந்து ரஷித் கானுடன் இணைந்து நோன்பு இருக்கு வார்னருக்கும், வில்லியம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in