

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆக்கி சாம்பியன்ஷிப் இறுதி லீக்கில் ஐஓபி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோல் வித்தி யாசம் அடிப்படையில் தெற்கு ரெயில்வே 2-வது இடத்தை பிடித்தது.
முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.75 ஆயிரமும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை கமிஷனர் கீர்த்திகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவர் செல்லதுரை அப்துல்லா, ஆக்கி சங்க தலைவர் டி.எஸ்.பஞ்சாப கேசன், லீக் கமிட்டி சேர்மன் மலர்செல்வம், செயலாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.