Last Updated : 11 Apr, 2021 07:09 PM

 

Published : 11 Apr 2021 07:09 PM
Last Updated : 11 Apr 2021 07:09 PM

சன்ரைசர்ஸ் தோற்கலாம்; கொல்கத்தா அணி வெல்வதற்கான 3 காரணங்கள் என்ன? 

கோப்புப்படம்

சென்னை


சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியில் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிைய எதிர்த்து விளையாடுகிறது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.


கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தாஅணியைவிட சன்ரைசர்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்ற ஒரேஅணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டும்தான். கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் சன்ரைசர்ஸ் அணி வென்றது, 2018ம் ஆண்டு 2-ம் இடத்தையும் பிடித்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொல்கத்தா அணி 5-வது இடத்தைத்தான் பிடித்தது.

இதுவரை 19 போட்டிகலில் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதியுள்ளன. இதில் 7 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியும், 12 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வென்றுள்ளன.
பேட்டிங், பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைவிட கொல்கத்தா அணி வலுவாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி வெல்லவும் வாய்ப்புள்ளது அதற்கான 3 காரணங்கள்.

வலுவான நடுவரிசை பேட்டிங்

கொல்கத்தா அணியில் வலுவான நடுவரிசை பேட்டிங் இருக்கிறது. குறிப்பாக ஆன்ட்ரூ ரஸல், மோர்கன், தினேஷ் கார்த்திக், சஹிப் அல் ஹசன், கருண் நாயர், கம்மின்ஸ் என பேட்டிங்கில் 9-வது வீரர்வரை வலுவான வரிை இருக்கிறது.
இதுபோன்ற வலிமையான நடுவரிசை பேட்டிங் வரிசை சன்ரைசர்ஸ் அணியிடம் இல்லை. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியில் திறமைவாய்ந்த பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன், ரஷித்கான் இருப்பதும் பலமாகும்.

பல்வேறு விதமான பந்துவீச்சாளர்கள்

கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான பந்துவீச்சாளர்கள் உள்ளன. ஆன்ட்ரூ ரஸல், கம்மின்ஸ், சகிப் அல் ஹசன், சுனில் நரேன், தேவைப்பட்டால் பந்துவீச நிதின் ராணா, பிரசித் கிருஷ்னா, சக்கரவர்த்தி, மோர்கன், குல்தீப் யாதவ், லெஸ்ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின், ஆஃப் ஸ்பின் வீசும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும என்பதால், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.

சுழற்பந்துவீச்சுக்கு எதிராகத் திணறும் சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணியில் உள்ள முக்கிய பேட்ஸ்மேன்கள் வார்னர், விருதிமான் சாஹா, மணிஷ் பாண்ேட விஜய் சங்கர் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார்கள்.பேர்ஸ்டோ மட்டுமே அடித்து ஆடக்கூடியவர். அதிலும் சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது, பந்து மெதுவாக வரும், பவுன்ஸ் ஆகாது என்பதால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள்.
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், நரேன் , சகிப் அல் ஹசன் ஆகியோர் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x